நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் அதிக நேரம் பேசினார். இவர் பேசும் போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது குரல் எழுப்பினார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி மோடியைச் சபையில் கிண்டல் செய்து சிரித்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரேணுகா சவுத்திரி ஏன் அப்படி சிரித்தேன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார். மோடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிகமாக பேசினார். இவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே ரேணுகா சவுத்திரி சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். அவரது சிரிப்பு சத்தம் அனைத்தையும் தாண்டி கேட்டுக் கொண்டு இருந்தது. இது அவையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு ரேணுகா பதில் அளித்துள்ளார். அதில் ''ஆமாம் சிரிக்காமல் என்ன செய்வார்கள். அவர் அப்படித்தான் பேசினார். அப்படிப் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள். இதோ இப்போது நான் பெண் என்றவுடன் எளிதாக என்னை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Congress MP Renuka Chowdhury mocks Modi with her hilarious laugh in Rajya Sabha yesterday. Renuka says that, she smiled at him because, he talked so funny.