சென்னை அருகே ஏரிக்குள் கிடந்த தங்க சிலைகள்- வீடியோ

Oneindia Tamil 2018-02-07

Views 2.8K

சென்னை அருகே ஏரிக்குள் இருந்து 'தங்க சிலைகள்' மீட்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு நிலவியது. ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் ஏரி உள்ளது. இதனிடையே ஏரி நீருக்குள் தங்கத்திலான சாமி சிலைகள் கிடப்பதாக அக்கம் பக்கத்து ஊர்களில் ஒரு செய்தி தீயாக நேற்று பரவியது. இதையடுத்து அக்கம் பக்கத்து ஊர்க்காரர்கள் கூட்டம் கூட்டமாக அந்த ஏரியின் அருகே குவிந்தனர். தகவல் அறிந்து, தாசில்தார் ரமேஷ், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசாரும் அங்கு விரைந்தனர்.

ஏரிக்குள் சாமி சிலைகள் இருப்பதை பார்த்ததும், அதை மீட்க நடவடிக்கை எடுத்தனர். தண்ணீருக்குள் இருந்த 11 சாமி சிலைகளை வெளியே எடுத்து மீட்டனர். அவை தங்க வண்ணத்தில் பளபளப்புடன் இருந்தன. இதை பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

'Golden Idols' were recovered from a lake near Chennai. The police are collecting details about where the idols kept in the temple in Kancheepuram district.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS