சேது நடிகரால் பாதிக்கப்பட்ட சின்ன பட இயக்குநர்! | FilmiBeat Tamil

Filmibeat Tamil 2018-02-05

Views 2.9K

இந்த வார ரிலீஸில் 5 படங்கள் போட்டியிட்டன. தல தளபதி ரசிகர்களை மையமாக வைத்து கதை அமைந்த படமும் ஒன்று. அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சியின்போது இயக்குநர் 'சின்ன படங்களுக்கு உதவி பண்றதா சொல்றாங்க... ஆனா தியேட்டர் கொடுக்க மாட்றாங்க...' என்று புலம்பினார். அவரது புலம்பலுக்கு பின்னால் ஒரு சம்பவம் இருக்கிறதாம். சேது நடிகர் கையால்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும்போது நடிகர் படத்தின் ரிலீஸ் தேதியை கேட்டாராம். ஃபிப்ரவரி 2 என்று சொன்னாராம் இயக்குநர். நல்ல தேதியாச்சே... வேற படங்கள் எதுவும் போட்டியில் இல்லை என்று பாராட்டியவர் அதே தேதியில் தனது படத்தையும் இறக்கி விட்டார். இதனால் ஏற்பட்ட புகைச்சல்தான் இயக்குநர் புலம்பலுக்கு காரணம் என்கிறார்கள். இந்த படம்லாம் தனியாவே வந்திருந்தாலும்... என்று பார்த்தவர் ஒருவர் கமெண்ட் அடித்தது வேறு கதை

That Small film director has disappointed with Sethu actor who released his film also with his movie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS