முட்டை வியாபாரியை ஏமாற்றிய ஜெ.தீபா- வீடியோ

Oneindia Tamil 2018-02-05

Views 2

தீபாவும் ராஜாவும் தன்னிடம் ரூ. 1 கோடி வரை பண மோசடி செய்துள்ளதாக முட்டை வியாபாரி ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் அவ்வப்போது சிக்கி வருகிறார். பேரவைக்கு உறுப்பினர் விண்ணப்பம் வழங்கியதில் முறைகேடு, போயஸ் தோட்டத்தில் சகோதரன் தீபக்குடன் சண்டை, பேரவைக்குள் கார் டிரைவர் ராஜாவின் தலையீடு அதிகம், கார் டிரைவர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதும் பின்னர் வெயிட்டான பதவி கொடுத்து மீண்டும் சேர்த்து கொள்வது என தீபா மீது ஏராளமான புகார்கள் எழுந்தன.இந்த நிலையில் அவரும், ராஜாவும் தன்னிடம் ரூ.1 கோடி கடன் வாங்கிவிட்டு இன்னும் தராமல் இழுத்தடிப்பதாக சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை மொத்த வியாபாரியான ராமச்சந்திரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Egg trader accuses J.Deepa and her car driver Raja for cheating Rs. 1 crore and they promises to make the trader a minister.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS