தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் - தம்பிதுரை- வீடியோ

Oneindia Tamil 2018-02-05

Views 1.1K

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு வரவில்லை என்ற குறை எங்களுக்கு இருக்கிறது என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியார்களிடம் பேசிய அவர், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு உரிய பங்கு வரவில்லை என்ற குறை எங்களுக்கு இருக்கிறது என்றார். தொடர்ந்து, தமிழகத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி இதுவரை வரவில்லை என்று கூறினார். ஜிஎஸ்டியால் தமிழகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இழப்பிற்கான நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று கூறினார். தமிழகத்திற்கான உரிமை பறிபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதே சமயத்தில் ஒரே இந்தியா என்ற கொள்கையை எதிர்ப்பதாகவும் தெரிவித்த அவர், ஒரே நாடு என்று கூறி அதிகாரங்களை மத்திய அரசு தன்வசம் குவித்துக்கொள்வது நல்லதல்ல என்றும் கூறினார். அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் செலவைக் குறைக்க, லோக்சபாவிற்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்றும் தம்பிதுரை கூறியுள்ளார்.


Loksabha deputy chairman Thambidurai has said that the ADMK govt will get the due share for Tamil Nadu from the Union Govt.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS