குழப்பிய செல்லூர் ராஜூ...தெளிவுபடுத்திய ஓபிஎஸ்- வீடியோ

Oneindia Tamil 2018-02-05

Views 171

அரசின் சலுகைகளை பெற அதிமுக அடையாள அட்டை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெளிவுப்படுத்தியுள்ளார். அதிமுக சார்பில் கடந்த 29-ஆம் தேதி முதல் அதிமுகவுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆங்காங்கே உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் , அதிமுக உறுப்பினர்தான் நமக்கு அத்தாட்சி. அந்த கார்டு என்பது உயிர் போன்றது. இந்த கார்டை அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.


Deputy Chief Minister O.Paneer Selvam clarifies no need to be ADMK member to get government's welfare schemes.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS