ஓபிஎஸ் ஈபிஎஸ் பேச்சை கேட்காமல் தினகரன் பக்கம் சின்னச்சாமி சாய்ந்ததே அதிமுக அண்ணா தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது சின்னசாமியின் செயல்பாடு சரியில்லாததே நீக்கத்திற்கு காரணம் என கூறப்பட்டாலும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக நடந்து கொண்டதே இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை, தொழிற்சங்க பணிகளை மேற்கொள்வதற்காக யு.ஆர் கிருஷ்ணன், தாடி ம.இராசு, சங்கரதாஸ் உள்ளிட்ட மூவர் குழுவை நியமித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைப்பெற்ற சின்னச்சாமியை நீக்கியிருப்பது அதிமுகவில் பெருத்த விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. மேலும், அதிமுகவின் 14 துணை அமைப்புகளில் அண்ணா தொழிற்சங்கம் மிக முக்கியமானது என்பதால் அதன் செயலாளர் நீக்கப்பட்டிருப்பதை மிக முக்கியமாக கவனிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
Sacking of Anna labour union secertary Chinnasamy has created ripples in ADMK