நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் மதுரை விமான நிலையத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றனர். இவர்களின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு இருவர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சீமான் கூறியதாவது : உயிர் காக்கும் மருத்துவம், அறிவு வளர்க்கும் கல்வி, ஆதாரமாக இருக்கும் நீர், போக்குவரத்து எல்லாமே தனியார்மயப்படுத்தப்பட்டு விட்டது.
மருத்துவத்தை தனியாரிடம் கொடுத்துவிட்டு காப்பீடு தருவேன் என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா? எல்லாமே தனியாரிடம் கொடுத்துவிட்டார்கள், கல்வி நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்துவிட்டு பேருந்து கட்டணத்துக்கான பாஸை இலவசமாகத் தருகிறோம் என்பது எவ்வளவு வேடிக்கையோ அது மாதிரித் தான் இதுவும்.
Naam tamilar party organiser Seeman and ASMK leader Sarathkumar jointly met press at Madurai airport and criticised union buget 2018, will both join hands in politics?