சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் அறுவறுப்பான கருத்தை பதிவிடுவதோடு, தொலைபேசியிலும் மிரட்டல்கள் வருவதாக தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இதுவரை என் மீது வன்மமான பேச்சுகள் பரப்பப்படுவதாக புகார் அளித்திருக்கிறேன் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த முறை ஆதாரத்துடன் புகார் அளித்திருக்கிறேன். என்னடைய முகநூல் பக்கத்திலேயே வந்து அறுவறுப்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர்களும் அவருடன் இருப்பவர்களுமே இவ்வாறான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதனை ஆதாரத்துடன் போலீசாரிடம் அளித்துள்ளேன்.
Jayalalitha's neice J.Deepa filed complaint with Chennai comissioner that life threat for her from Sasikala family and from Dinakaran through facebook and telephone conversations.