மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

Oneindia Tamil 2018-02-01

Views 4.4K

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் வழக்கமாக பிப்ரவரி இறுதியில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த வருடத்தில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

இந்த பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான். மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

Finance minister Arun Jaitley will present the Union Budget 2018 in Parliament on Thursday, with investors expecting increased spending and a reduction in tax slabs. In his budget speech, Jaitley is expected to address agriculture distress, unemployment and ways to boost growth in the Indian economy while sticking to fiscal prudence.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS