சூர்யா 36 அப்டேட்

Filmibeat Tamil 2018-01-31

Views 1

நடிகர் சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை புத்தாண்டு தினத்தன்று நடந்தது. இந்தப் படத்தில் நடிக்க 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி, நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 1 முதல் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்பட்டது. பொங்கல் முதல் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சமீபகாலமாக சூர்யா நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் பெரிய ஓப்பனிங் இருந்து வருவதால், இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் கலைஞர்கள் அதிகமாக நடிக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் சூர்யாவும், ஜெகபதிபாபுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு தமிழில் 'லிங்கா', 'பைரவா', 'கத்திசண்டை' என சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் ஜெகபதிபாபு.

Actor Surya's 36th film is directed by selvaraghavan. Sai Pallavi and Rakul Preet Singh have been signed to act in this movie. In this case, Telugu actor Jagapathy Babu has been signed as the villain of the film.

Share This Video


Download

  
Report form