அமெரிக்காவில் இருக்கும் ஹவாய் மாகாணத்தில் கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டது. வடகொரியாவின் ஏவுகணை தாக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அணு ஆயுதமா என்ன மாதிரியான ஏவுகணை என குறிப்பிடப்படவில்லை. மேலும் என்ன மாதிரியான தாக்குதல் நடத்தப்பட இருக்கிறது என்றும் கூறப்படவில்லை. தற்போது இந்த எச்சரிக்கை குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிகாரி ஒருவர் அழுத்திய தவறான பட்டனால் இத்தனை விபரீதமும் நடந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் தற்போது பிரச்சனை நிலவி வருகிறது. என்னுடைய மேசையில் அணு ஆயுத பட்டன் இருக்கிறது என்று வடகொரியா அதிபரும், என்னுடைய மேசையில் அதைவிட பெரிய பட்டன் இருக்கிறது என்று அமெரிக்க அதிபரும் சவால் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருக்கும் ஹவாய் மாகாண மக்களுக்கு முக்கிய மெசேஜ் ஒன்று சென்றுள்ளது. அதில் ''ஹவாயை நோக்கி ஏவுகணை ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள். இது பயிற்சி இல்லை நிஜம்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
A defence ministry workers in America sends false missile alert to people in Hawaii. He panics that the missile has launched by North Korean military in their zone.