அமெரிக்காவில் இருக்கும் ஒசார்க்ஸ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரு வீட்டிற்குள் திடீர் என்று புகுந்த 'ட்ரூ அட்சிசன்' என்ற நபர் அங்கு இருந்த மூன்று பேரையும் கொலை செய்து இருக்கிறான். போலீஸ் நீண்ட விசாரணைக்கு பின்பே இவனை கைது செய்து இருக்கிறது. தற்போது போலீஸ் இவனை தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த கொலைக்கு எந்த காரணமும் இல்லை என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். ஆனாலும் போலீஸ் இவனை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது.
முதலில் ட்ரூ அட்சிசன் அந்த வீட்டிற்குள் புகுந்து ஹார்லி மைக்கேல் மில்லியன் மற்றும் அவரது மனைவி சமாரா போன்டெயின் கிட்ஸ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை இருக்கிறான். பின் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை ஒரு அறையில் வாயை கட்டி அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று இருக்கிறான்.
மறுநாள் வந்து கொலை செய்யப்பட இரண்டு பேரையும் காரில் எடுத்து போட்டுவிட்டு அந்த சிறுமியை அவர்கள் உடலுடன் கட்டிவிட்டு பக்கத்தில் இருக்கும் காடு ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளான். பின் அங்கு வைத்து அந்த சிறுமியையும் கொலை செய்துவிட்டு மூன்று பேரையும் எரித்து இருக்கிறான்.