அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா மணி என்கிற மணிகண்டன். கடந்த 20ம் தேதி அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
அப்போது பன்னீர்செல்வத்தின் காலில் விழுவதை போல சென்ற வசந்தா மணி, திடீரென அவரை அறைந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, எம்எல்ஏவை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் வசந்தா மணி. எம்எல்ஏ தன்னை பதிலுக்கு தாக்கியதாக வசந்தாமணி தரப்பும் புகுார் கொடுத்திருந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட, 4 நாட்களில் திடீரென வசந்தாமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டு, கடந்த 24ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர்.
வசந்தாமணிக்கு, மூளையில் ரத்தம் கட்டியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்பிறகு, மருத்துவமனையில் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார் வசந்தா மணி. ஆனால், இன்று காலை திடீரென அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்
Vasanthamani an youth who was attack AIADMK MLA Panneerselvam died after admitted in a gvt hospital in Vellore.