நடிகர் ஷாருக்கானின் அலிபாக் கடற்கரையை ஒட்டியுள்ள தேஜா வூ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட்டை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பினாமி சொத்து தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக டிசம்பர் மாதத்திலேயே ஷாருக்கானுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் உலக அளவில் புகழ் பெற்றவர். தற்போது அவர் மும்பை பாந்திரா, பேண்ட் ஸ்டாண்டு பகுதியில் இருக்கும் மன்னத் பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு மஹராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் கடற்கரை அருகே 1 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சுவருடன் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பண்ணை வீட்டை தான் வருமான வரித்துறையினர் இன்று முடக்கியுள்ளனர். வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் இந்த சொத்து முடக்கம் உண்மையான தகவல் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரிவு 24ன் கீழ் பினாமி சொத்து யாருக்கு தொடர்புடையதோ அவர் யார் என தெரியும் பட்சத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் அனுப்பிய 90 நாட்களுக்கு அந்த சொத்தை முடக்குவதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாக அதிகாரி சுட்டி காட்டுகிறார்.
Income tax department atached actor Shahrukh Khan's Alibag beach town farm house at Maharashtra under Prohibition of Benami Property Transactions Act after futher notice issued on December