வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆட்சியாளர்களே கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் வரலாறு காணாத இன்றைய பேருந்துக் கட்டண உயர்வு என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர். அவரது அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 8 போக்குவரத்துக் கழகங்கள் இயங்குகின்றன. இவை மொத்தம் 20,023 பேருந்துகளை இயக்குகின்றன. இவற்றில் கால்வாசி பேருந்துகளே ஓட, ஓட்டத் தகுதி உள்ளவை.சுமார் 1,45,000 தொழிலாளர்கள் அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு இவர்களையொத்த பிற அரசுத் துறை ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. மாதாமாதம் இவர்களின் ஊதியத்திலிருந்து பல்வேறு இனங்களுக்காகப் பிடிக்கப்படும் தொகை, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன், பணிக்கொடை என ரூ.7,000 கோடி பல ஆண்டுகளாக இன்னும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. பல முறை பேச்சு மற்றும் போராட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு வந்தபாடில்லை.
Tamizhaga vazhvurimai katchi leader Velmurugan slams Tamilnadu government on bus fare hike. He said fare hike is daylight robbery