சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாலத்தில் இருந்து இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏர்போர்ட் 4வது நுழைவு வாயில் அருகே உள்ள பாலத்தில் இருந்து இளைஞர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் யார் என இதுவரை தெரியவில்லை. தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை.
அந்த இளைஞர் குறித்து போலீசார் விசாரைண நடத்தி வருகின்றனர். விமான நிலலையத்தில் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் இன்னும் தெரியவில்லை. சென்னை விமான நிலைய மேற்கூரை விழுவது தொடர்கதையாக இருந்த நிலையில், இப்போது வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சென்னை விமான நிலையத்தில் மற்றொரு பரபரப்பாக அமைந்துள்ளது.
Youth committed suicide by jumping from a bridge at Chennai domestic airport. The youth who jumped from the bridge and committed suicide is not yet known. The cause of suicide is unknown.