புதிய பறவை அதிக தூரம் பறக்காது என்று ஸ்டாலின் குறிப்பிட்டது போல் குடும்ப பறவைகளும் அதிக தூரம் பறக்காது என்றார் தமிழிசை. மக்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பேருந்து கட்டணத்தை சொற்ப அளவில் தமிழக அரசு குறைத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்துடைப்பு நாடகம் என்றஉ கூறி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம் புங்கரை பகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது வரவேற்கத்தக்கது என்றும் தொடர்ந்துமாணவர்களை சரியாக வழி நடத்த வேண்டிய இந்த காலத்தில் திரைப்பட நடிகர் தியாகிகள் போன்று பேசுவது அவர்களிடம் பேசி வருவது சரியான நடைமுறையாக இருக்காது. புறம்போக்கு களவாணி என்று ஸ்டாலின் சொல்லும் அளவுக்கு பாஜக இல்லை. தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்து வருவதால் தமிழக கட்சிகளிடையே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மேடைகளில் தரம் தாழ்த்தி பேசுகின்றனர். இருப்பினும் நாங்கள் அவர்களிடம் கூட்டணி குறித்து பேச தேவை இல்லை. அதை முந்தி கொண்டு பேசுவதின் காரணம் ஏன் என்று தெரியவில்லை. குடும்ப ஆட்சி மறுபடியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸில் ராகுல் . திமுகவில் உதயநிதி ஸ்டாலின். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதிய பறவை அதிக தூரம் பறக்காது என்று ஸ்டாலின் குறிப்பிட்டது போல் குடும்ப பறவைகளும் அதிக தூரம் பறக்காது என்றார் தமிழிசை.
BJP State President Tamilisai Soundararajan welcomes Tamilnadu government's bus fare reduction.