போலீஸ் வாகனத்தில் பெண்ணை கடத்தி சென்ற கும்பல்

Oneindia Tamil 2018-01-29

Views 1

மத்திய பிரதேசத்தில் சமீப காலமாக நிறைய குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. கடத்தல், கொலை என நாளுக்கு நாள் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சினிமா காட்சிகளை மிஞ்சும் சம்பவம் ஒன்று அங்கு நடந்து இருக்கிறது. போலீஸ் உடையில் வந்த நான்கு பேர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடத்தி இருக்கிறார்கள். அவர்கள் போலீஸ் வாகனத்தை கடத்திய சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது.

போபாலில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு போலீஸ் ரோந்து செல்லும் இடத்தில் சாலையில் அடிப்பட்டு ஒருவர் படுத்துக் கிடந்துள்ளார். போலீஸ் அவரை சென்று தூக்கிய போது, அந்த நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி இருக்கிறார். பின் அந்த நபர் போலீஸ் உடையை வாங்கிக் கொண்டு, வாகனத்தை தூக்கிக் கொண்டு நண்பர்களுடன் பறந்து இருக்கிறது.

போலீஸ் காரில் அங்கிருந்து 'பார்முகா' என்ற கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். அங்கு ராஜ் குமார் பட்டேல் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த ராஜ் குமார், அவர் தம்பி, அவரின் மகள் மூன்று பேரையும் விசாரணை என்று கூறி அழைத்து சென்றுள்ளனர்.

Group of men kidnap a woman in police getup in Madhya Pradesh. They took the police dress and police vehicle by showing gun to 100 dial police vehicle.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS