2018 பட்ஜெட் முக்கிய வரிகள் என்ன தெரியுமா ?

Oneindia Tamil 2018-01-29

Views 6

அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் எப்படி இருக்கும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று பார்க்கலாம். நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்குக் கிடைத்துள்ள கடைசி நிதியாண்டு இது.

மாதச் சம்பளம் வாங்குவோர் ஒரு மாதத்துக்கான வரவு, செலவுகளுக்கு எப்படி திட்டம் போடுகிறார்களோ அதுபோலவே மத்திய அரசும் ஒரு வருடத்திற்கு என்ன வருவாய் வரும், என்ன செலவு செய்யப்போகிறோம் என்பதை உத்தேசமாக மதிப்பிட்டு தயாரிக்கும் ஒரு வரைவு அறிக்கையாகும். சுருக்கமாக சொல்வதானால் வரும் ஆண்டில் ஒரு ரூபாய் வருமானத்தில் எவ்வளவு செலவு செய்யப்போகிறோம் என்பதை சொல்லும் திட்ட அறிக்கையாகும்.

நேரடி வரிகள் (Direct Taxes) என்பது ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்திற்கான வரியை (Income Tax. Corporate Tax) தாங்களே கணக்கிட்டு அரசுக்கு செலுத்துவது. மறைமுக வரிகள் (Indirect Taxes) என்பது நாம் வாங்கும் பொருளுக்கும் நாம் பயன்படுத்தும் சேவைகளுக்கும் செலுத்தும் வரிகளாகும். தொலைபேசி கட்டணம், சூப்பர் மார்கெட்டில் வாங்கும் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும்.

Most of the public knows only the revenues and taxes into the Budget. There are a few words contents in our Budget book. We have to know all of those budget glossary.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS