ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குட்டையில் மூழ்கி பலி

Oneindia Tamil 2018-01-27

Views 139

சேலம் மாவட்டம் கந்தகிரியில் உள்ள குட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் என மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் கந்தகிரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூன்று சடலங்கள் மிதப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் குட்டையில் கிடந்த மூன்று பேரின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெரியார் நகரில் வசித்து வந்த நாகராஜ், அவரது மனைவி பிரேமா, மகள் சுகன்யா ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் குட்டையில் குளித்துக்கொண்டிருக்கும் போது உயிரிழந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகி இருப்பது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Three members of the same family were drowned in water in Salem. Police went on Probe that it Accident or Suicide

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS