2.O படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் - ஷங்கர்

Filmibeat Tamil 2018-01-27

Views 2K

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிக்க பிரமாண்டமாக உருவாகி வரும் படம் '2.O'. ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் பணிகள் மும்முரமாய் நடந்து வருகின்றன.

'2.ஓ' படத்தின் ஆடியோவை துபாயில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிட்டவர்கள் இன்னும் படத்தின் டீசரை வெளியிடவில்லை. ரஜினி ரசிகர்கள் இந்த டீசர் எப்போது வெளியாகும் என ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் டீசர் குறித்து ஷங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், '2.O' டீசர் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் அது முடிந்ததும், டீசர் விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசு தின விழா வாழ்த்தாக வந்திருக்கும் இந்தச் செய்தி, ரஜினி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. படத்தின் கிராஃபிக்ஸ் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் எனக் கூறப்பட்டு வருவதால், டீசர் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Rajinikanth, Akshay Kumar and Amy Jackson plays lead roles in the film '2.O'. Director Shankar has posted on his Twitter page about Teaser. "The teaser work of 2.0 is going in full swing at Mobscene, LA. It involves lot of CG, so once it is done the teaser will be released.", he posted.

Share This Video


Download

  
Report form