குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-26

Views 6

நாட்டின் 69வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றினார்.

சென்னை மெரினாவில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மூவர்ண தேசிய கொடியை ஆளுநர் பன்வாரிளால் புரோகித் ஏற்றினார்.பின்னர் நடைபெற்ற முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றார் ராணுவம், கடற்படை, விமானப்படை பிரிவு வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர் . பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வீர தீர செயலுக்காக காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கினார். சண்முகம், சாதிக் பாஷா, கண்ணன் ஆகியோருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் வழங்கினார். தருமபுரி விவசாயி முனுசாமிக்கு வேளாண் விருது வழங்கப்பட்டது.

கோலாகலமாக மெரினாவில் நடைபெற்ற இந்த விழாவை ஏராளனமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

இதேபோல் தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தேசிய கோடியை ஏற்றினர் .சேலத்தில் ஆட்சி தலைவர் ரோகிணி கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார் . திருவண்ணாமலையில் ஆட்சி தலைவர் கந்தசாமி , கிருஷ்ணகிரி ஆட்சிதலைவர் கதிரவன் , வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் உள்ளிட்ட அணைத்து ஆட்சி தலைவர்களும் காவல்துறை அதிகாரிகளும் தேசிய கொடியை ஏற்றினர் .

Des : On the 69th Republic Day of the country, Governor Panwarilal Purohit presented the National flag.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS