வருடத்தில் ஒரு முறையாவது பொது மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதே போல முப்பது வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.
பொதுவாகவே மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணம், அதற்கு ஆகும் செலவு தான். உங்கள் வீட்டிலேயே ஒரு ஸ்பூன், பிளாஸ்டிக் கவர் மற்றும் விளக்கு கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது அறிய முடியும் என்றால் செய்வீர்களா?
செய்முறை #1
நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண எவர்சில்வர் ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். அதை அடிப்பகுதியை கொண்டு நாக்கின் மேல் பகுதியில் தேய்க்க வேண்டும்.
செய்முறை #2 பிறகு அதை 100 % டிரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு கவரில் போட்ட ஸ்பூனை, அந்த கவருடன் ஒரு மேசை விளக்கின் ஒளிப்படும் படி வைக்க வேண்டும்.