குடியரசு தினத்திற்கு பாபா முத்திரையுடன் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

Oneindia Tamil 2018-01-26

Views 869

குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் , வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இன்று காலை இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் " என்று பதிவிட்டுள்ளார்.


பஸ் கட்டண உயர்வு, வைரமுத்து விவகாரம், ஜெயேந்திரர் சர்ச்சைகளுக்கு ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி அவர் டுவிட் வெளியிட்டுள்ளார்.

இந்த டுவிட் வார்த்தையின் இறுதியில், பாபா முத்திரை சின்னத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட்ட மேடையிலும் இந்த சின்னத்தை காண்பித்தார். அவரது நற்பணி மன்ற வெப்சைட்டிலும் பிரதான இடத்தை பிடித்துள்ளது இந்த சின்னம். இதையே தேர்தல் சின்னமாக பெறும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Actor Rajinikanth wishes on the occasion of the Republic Day. Rajinikanth also showed this BaBa sybol on the stage where he made political announcement.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS