பேருந்து கட்டணம் உயர்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்காவது நாளாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணம் உயர்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். நான்காவது நாளாக இன்றும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அவினாசியில் பேருந்து கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
Des : Students and civilians staged protest in various districts of Tamil Nadu for the fourth day in protest against the rise of bus fares.