பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக பள்ளி குழந்தைகள் வாகனம் மீது கார்னி சேனா குண்டர்கள் கல்வீசித் தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பத்மாவத் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு கிடைக்காது என்பதால் திரையரங்குகள் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டன.
பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய எந்த காட்சியும் இல்லை என தெரிவித்த பிறகும் இந்துத்துவா அமைப்பான கார்னி சேனா தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதில் வெறித்தனமாக டெல்லி அருகே குருகிராமில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை கல்வீசித் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பிஞ்சு குழந்தைகள் பேருந்துகளில் சீட்டுகளுக்கு அடியே பதுங்கி அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Karni Sena goons attack school kids, Gurugram near Delhi. Gurugram’s GD Goenka School bus was attacked by Karni Sena goons.