ஐதராபாத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்பி எடுத்துள்ளார். இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் வெளியிட்ட செல்பி வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.|சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீசார் அடித்ததால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக இருக்கிறது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஹாலிடே இன் விடுதிக்கு அருகில் கார் ஓட்டுநர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.