கர்நாடகாவில் நாளை பந்த்...பேருந்துகள் ஓடாது...பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வீடியோ

Oneindia Tamil 2018-01-24

Views 1

மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை பந்த் நடைபெற உள்ளது. இதனால் பஸ் சேவைகள் பாதிக்கப்படும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.

கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் நடுவே மகதாயி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மோதல் போக்கு நிலவுகிறது. கர்நாடகாவில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து காரியம் சாதிக்க கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் நாளை பந்த் நடத்த 2000க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் இணைந்து அழைப்புவிடுத்துள்ளன.
'கன்னட சலுவளி வாட்டாள்' என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து பந்த்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பந்த் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற அக்கறை, மாநிலத்தை ஆளும் காங்கிரசுக்கு இருக்கும் என்பதால், மறைமுகமாக, அரசும் பந்த்துக்கு ஆதரவு அளிக்கும் என்பது கன்னட அமைப்பினர் நம்பிக்கை.

There will be a Karnataka bandh on January 25, Thursday. Several private schools and state government offices are expected to be shut tomorrow following the bandh call given by organisations protesting against the Centre's apathy towards the Mahadayi dispute.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS