ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி பேசியது.

Filmibeat Tamil 2018-01-24

Views 23

எந்த படத்தில் நடித்தாலும் ஒரு விஷயத்தை திருடும் பழக்கம் தன்னிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது விஜய் சேதுபதி பேசியதாவது, இந்த நல்ல நாளுக்காக ரொம்ப நாள் காத்திருந்தோம். ஒரு நல்ல நாளில் இந்த படம் துவங்கியது. எனக்கும் ஆறுமுகத்துக்குமான நட்பு அப்படி தான் துவங்கியது. ஒரு தெளிவான நீரோடை மாதிரி இருப்பார் ஆறுமுகம். கலங்கிப் போக மாட்டார். என்ன நடந்தாலும் சரி அவர் முகத்தில் எக்ஸ்பிரஷனே வராது. அது மாதிரி மூஞ்சியை செஞ்சுவிட்டாங்களான்னு தெரியவில்லை. ஆறுமுகத்திற்கு என் மீது சந்தேகம் இருந்ததே இல்லை. நான் எப்பவுமே ஒரு படத்தில் நடித்தால் அந்த இயக்குனரின் ஐடியாலஜியை திருடி எடுத்துச் சென்று இன்னொரு படத்தில் பயன்படுத்துவேன். இந்த படத்தில் ஆறுமுகத்தின் ஐடியாலஜியை நிறைய எடுத்துள்ளேன். காயத்ரி எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார ஏங்குபவர் காயத்ரி. அறிவாளியான பொண்ணு, புத்திசாலியான பொண்ணு. அதனால் தான் மேலே வர லேட்டாகிறது என்று நினைக்கிறேன். சினிமாவிலும், வெளியும் சரி டேனிக்கு வாய் தான் பிரச்சனை. வாய் தான் அவனை வாழ வைக்கிறது என்றார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi said that he has the habit of stealing a director's ideology and use it in his another movie. He has appreciated ONNPS co-stars Gautham Karthik and Gayathri. He believes that Gautham will go places.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS