ஆணுறை விளம்பரத்தை பத்தி காஜல் அகர்வால்- வீடியோ

Filmibeat Tamil 2018-01-23

Views 25

ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆணுறை விளம்பரங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
ஆணுறை விளம்பரங்களில் பிரபல நடிககைள் நடிக்கத் துவங்கியுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆணுறை விளம்பர கட்டுப்பாடு குறித்து காஜல் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, இந்திய மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்றால் ஆணுறை விளம்பரம் மிகவும் முக்கியம். அந்த விளம்பரத்தை அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும். அந்த விளம்பரத்தை பார்த்து சிலர் குழந்தை பெறுவதை குறைத்துக் கொள்ளக்கூடும் என்றார். பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். தான் நடித்துள்ளதால் தான் மத்திய அரசு இந்த கட்டுபாட்டை விதித்துள்ளதாக அவர் குறைகூறியுள்ளார். 32 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் எப்பொழுது என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. பேட்டிகளின்போது அவருக்கு பிடிக்காத கேள்வியே இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress kajal Agarwal said in an event that condom advertisement should be shown in television frequently in order to control the population. Some people might get influenced by that and stop producing children, she added.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS