ஜல்லிக்கட்டுக்குத் திரண்டு போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் மறியல் செய்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியல், பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறக்கோரி மதுரை மூலக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Madurai students protest against the bus fare hike announced by the government. Police has lathi charged to college students.Police said more than 300 students sat on the Madurai road at Moolakarai and raised slogans against the State government.