டாஸ்மாக்கில் தொழில் வளர்ச்சியை பயன்படுத்தும் தமிழகம்... ராமதாஸ் வேதனை!- வீடியோ

Oneindia Tamil 2018-01-23

Views 598

ஆப்பில் பணம் செலுத்தினாலும் மதுக்கடைக்கு சென்று தான் மது அருந்த வேண்டும் என்ற தமிழக அரசின் திட்டம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு முழு முயற்சியாக ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மாநில அரசுகளும் முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வீடு வீடாக சென்று மது விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஆப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

தமிழக அரசு 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை நடத்தி வருகிறது. இவற்றில், தினமும் சுமார் ரூ. 70 கோடி வரையும், விடுமுறை தினங்களில், ரூ. 100 கோடிக்கும் அதிகமான, மது வகைகள் விற்பனையாகின்றன.

வீடு தேடிச் சென்று உயர்வகை மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசு மீது அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

Ramadoss reacting to the Tasmac officials explanation on liquor sale. He has tweeted that There is no sale of alcohol house and house. If you pay through in app als you need to go to the tasmac to drink. how does Tamil Nadu use science, technology and economic growth?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS