சமூகவலைதளங்களில் சிறுமிகள் மூலம் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சிக்கும் நித்தியானந்தா ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கர்நாடக போலீஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜனவரி 7ஆம் தேதி ராஜபாளைத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் கவிஞர் வைரமுத்துவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. காவல்நிலையங்களிலும் அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன. வைரமுத்துவுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.
ஆனால் வைரமுத்து கூறியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என்ற சென்னை ஹைகோர்ட் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் வைரமுத்து மீதான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
வைரமுத்து குறித்து நித்தியானந்தாவின் சிஷ்யைகள் என கூறிக்கொள்ளும் சிறுமிகள் ஆபாசமாக விமர்சித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து அவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் தரக்குறைவான வார்த்கைளுடன் கூடிய வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Social activist Piyush manush writes letter to Karnataka police against Nithyanantha Ashramam. Nithyanantha disciples criticizing Poet Vairamuthu in face book on Andal issue.