இந்திய பொருளாதார நிலையை அம்பலப்படுத்தும் ஆக்ஸ்பேம் சர்வே..!!- வீடியோ

Oneindia Tamil 2018-01-22

Views 3.5K

நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடமே உள்ளதாக சர்வதேச அமைப்பான ஆக்ஸ்பேட் ஹவர்ஸ் சர்வே கூறுகிறது. மேலும் 67 சதவீத மக்களின் வருவாய் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், இந்திய பொருளாதாரத்தால் ஏழை பணக்காரர்களிடையேயான விகிதாச்சார வித்தியாசம் அதிக அளவில் இருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தின் டேவோஸில் உலக பொருளாதார குறித்து விவாதிக்கும் சர்வதேச நாடுகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டேவோஸ் சென்றுள்ள நிலையில் சர்வதேச அமைப்பான ஆக்ஸ்பேம் ஹவர்ஸ், இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் தான் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உள்ள வருவாய் சமநிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்று சர்வே சொல்கிறது. மேலாளரின் வருவாயை எட்ட வேண்டுமெனில் இந்தியாவில் இருக்கும் கடை நிலை ஊழியர் சுமார் 941 ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது ஆய்வறிக்கை.

நாட்டில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 67 கோடி பேரின் வருவாய் ஒரு சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது 50 சதவீத மக்களின் வருவாய் என்பது 1 சதவீதமே உயர்ந்துள்ளது. ஆனால் 1 சதவீத பணக்காரர்களிடம் 73 சதவீத சொத்து சேர்ந்திருப்பது இந்தியாவில் ஏழை பணக்காரர்களின் இடைவெளி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதில் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 20 லட்சத்து 90 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பணக்காரர்களின் வருமானம் இந்தியாவின் ஒட்டுமொத்த பட்ஜெட்டிற்கு சமமானது.

International rights group Oxfam hours released a survey showing, the richest 1 per cent in India cornered 73 per cent of the wealth generated in the country last year whereas 67 crore Indians comprising the population's poorest half saw their wealth rise by just 1 per cent.

Share This Video


Download

  
Report form