கண்டிப்பாக இதில் ஒருசில செய்திகளை நீங்களே உண்மை என்று நம்பி பகிர்ந்திருக்கலாம். 2017ல் நாம் உண்மை என்று கருதிய பல செய்திகள் போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்ட போலியான செய்திகளாகும். இதில் ஓரிரு செய்திகள் பொய்யென வெளியானதுமே நாம் கண்டறிந்தவை தான். முக்கியமாக இரண்டாயிரம் ரூபாய் தாளில் ஜிபிஎஸ் சிப் இருக்கிறது என்று கூறப்பட்ட செய்தி. இதுப்போக, வேறுநிறத்தில் வெளியான இருநூறு ரூபாய் தாள். மேலும், சென்ற ஆண்டு புதியதாக ஓரிரு பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பகுதியில் போலியானது என அறியாமல் சில படங்களை பகிர்ந்து, பிறகு அவை போலி என கண்டறியப்பட்டன. கிட்டத்தட்ட, மோடி - சச்சின் சந்திப்பை கூட போட்டோஷாப் செய்து வைரலாக்கினார்கள் நெடிசன்கள்.
சரி! இந்த பத்து போலியான செய்திகளில் நீங்கள் எத்தனையை நிஜமாகவே உண்மை என நம்பி பகிர்ந்தீர்கள் என்பதை சரிபார்த்து கூறுங்கள்...
G20 உச்சிமாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட தலைவர்களின் படம் என்று பரவிய வைரல் புகைப்படம் இது. பலவேறு நாடுகளின் தலைவர்கள் மிக நெருக்கமாக இருப்பது போல காட்சியளித்த இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்ட புகைப்படமாகும். பலதரப்பட்ட மக்கள் தங்கள் நாட்டு தலைவரா இப்படி இருக்கிறார் என்று நம்பி வியந்தனர்.
ஏற்கனவே இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபார் நோட்டு உண்மையானது போல இல்லாமல், விளையாட்டு தாள் போல இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த வேளையில் தான் புதிய இருநூறு ரூபாய் நோட்டு என இந்த படம் வெளியானது. இருநூறு ரூபாய் வந்தது உண்மை தான். ஆனால், இந்த நிறத்தில் அல்ல. இன்று நாம் பயன்படுத்தும் இருநூறு ரூபாய் தாளின் நிறத்திற்கு, இந்த போலித் தாளின் நிறமே பரவாயில்லை என்று நீங்கள் கருதலாம்.