`சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. பின்னர் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ஜிகர்தண்டா', `எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', `தங்கரதம்', `தர்மதுரை', `ஒரு கனவு போல', `திருட்டுப்பயலே 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
மேலம் `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ஈடிலி', `கடைக்குட்டி சிங்கம்' படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் சௌந்ததராஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
“க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்“ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் தமன்னாவுக்கும் - சவுந்தர்ராஜாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
Sundarapandiyan Fame Soundaraja Engaged with Green Apple Entertainment CEO Tamanna.. They will Marry Soon in Madurai