செல்லூர் ராஜூ பேட்டி

Oneindia Tamil 2018-01-20

Views 588

பணவீக்கம் காலத்தில் ரூ. 1 பிச்சை போட்டால் பிச்சைக்காரர்கள் கூட வாங்க மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ த்ரில்லாக பேசியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை இன்று முதல் உயர்த்தியுள்ளது. இதை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் புரட்சி வெடிக்கும் என்று அரசியல் கட்சிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில் தமிழக முதல்வர் பேருந்து கட்டணத்தை மனமுவந்து ஏற்றவில்லை. பணவீக்க காலத்தில் ரூ.1 பிச்சை போட்டால் பிச்சைக்காரர்கள் கூட வாங்கமாட்டார்கள்.

புதிதாக கட்சி தொடங்கவுள்ள ரஜினியும் கமலும் நாட்டுக்கு என்ன செய்துள்ளார்கள்.
மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்றார் செல்லூர் ராஜூ. கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்ஜிஆருக்கு பிறகு ரஜினியின் ரசிகன் என்றும் அவரது கட்சி தொடங்கி கொள்கைகளை வெளியிட்டபின்பே கருத்து கூறமுடியும் என்று செல்லூர் ராஜூ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Minister Sellur Raju asks what Rajini and Kamal Hassan have done for the country to start their political party. Even beggers too not getting Rs. 1 during this inflation period, he added

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS