புதிய கட்சி தொடங்க ரஜினிக்கும் கமலுக்கும் வயதாகிவிட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில் புதிய கட்சி தொடங்கும் ரஜினிக்கும் கமலுக்கும் காலமும் வயதும் கடந்து விட்டது.எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவுக்கு சேதாரம் இல்லை. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையத் தொடங்கிவிட்டனர்.
தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே இந்து மதம் குறித்து தவறாக பேசுகின்றனர். இந்து மதத்தை கிள்ளுக்கீரையாகவே கருதுகின்றனர்.
யாராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. புதிய கட்சிகளெல்லாம் புதிய படங்கள் போன்று ஓரிரு மாதங்கள் இருக்கும் பின்னர் காணாமல் போய்விடும் என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியல் கட்சிகளை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Minister Rajendra Balaji says that there was age and period barred for Rajinikanth and Kamal hassan. Activists are being come back to ADMK.