நள்ளிரவில் போலீசார் நடத்திய திருமணம்… வேலூரில் பரபரப்பு…

Oneindia Tamil 2018-01-19

Views 428

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் கூடுதலாக வரதட்சனை வழங்க வேண்டும் என்று கோரி திருமணத்திற்கு மறுத்தவரை போலீசார் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரும் கடந்த செப்டம்பர் மாதம் இரு வீட்டார் முன்னிலையில் வரும் 22ம் தேதி திருமணம் செய்வதாக நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன் நிச்சயம் செய்யப்பட்ட போது பேசிய நகை பணத்தை விட கூடுதலாக வழங்க வேண்டும் என்று சிலம்பரசினின் பெற்றோர்கள் சித்ரா வீட்டினரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சித்ராவின் பெற்றோர்களும் உறவினர்களும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரு வீட்டினரையும் வரவழைத்ததுடன் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கோவிலில் வைத்து சித்ராவிற்கும் சிலம்பரசனிற்கும் நள்ளிரவில் திருமணம் செய்து வைத்தனர். திருமண தேதிக்கு முன் மணமக்களுக்கு போலீசார் நள்ளிரவில் திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Marriage to marry a woman who is engaged in marriage has been causing a stroke to the police demanding further dowry.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS