வீட்டில் வேலை செய்பவர் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார் குடும்பம்

Filmibeat Tamil 2018-01-19

Views 335

நடிகர் சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் ரோல்மாடலாக இருந்து வருபவர். திரையுலகில் பலருக்கும் முன்மாதிரிக் கலைஞர்.

கலையுலக மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் சிவகுமார் தனது நல்ல குணங்களின் மூலம் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர். இவரைப் பற்றி பல நல்ல விஷயங்கள் இவரிடம் நெருக்கமானவர்கள் மூலம் அவ்வப்போது வெளியாகும்.

சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளிலும், சிவகுமாரை பற்றி யாராவது நல்ல விஷயங்களை மேற்கோள் காட்டுவார்கள். அவரைப் போலவே அவரது மகன்களும் திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விளங்குவதாக பெருமையாகக் கூறுவார்கள்.

இந்நிலையில், தற்போது ஒரு நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது. சிவகுமார் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருபவர்கள் முருகன், கோவிந்தம்மாள். இவர்களது திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றிருக்கிறது.



Murugan and Govindhammal are working in Actor Sivakumar's house for many years. Murugan - Govindhammal marriage has taken place in Tirupati today. Sivakumar, Suriya, Karthi and their families participated in the wedding ceremony.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS