தினகரன் கூறி தான் ஜெ.சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது... உண்மையை கூறிய தினகரன் ஆதரவாளர்

Oneindia Tamil 2018-01-19

Views 2.5K

டிடிவி தினகரன் சொல்லித் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார் என்று முன்னாள் எம்எல்ஏவும், தினகரன் ஆதரவாளருமான ராஜசேகரன் தெரிவித்துள்ளார். ராஜசேகரனின் இந்த கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்டதாக சொல்லும் வீடியோ காட்சி ஒன்றை ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

தான் வீடியோவை வெளியிடுவது தினகரனுக்குத் தெரியாது என்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்புவதை தாங்க முடியாமலுமே வீடியோவை வெளியிடுவதாக வெற்றிவேல் கூறினார். தினகரனும், வெற்றிவேலிடம் வீடியோவைக் கொடுத்தது தான் தான் என்றும் ஆனால் அவர் வீடியோவை வெளியிடுவார் என்று நினைக்கவில்லை என்றும் கூறினார். எனினும் வீடியோவை வெளியிட்டதற்காக வெற்றிவேல் மீது தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சசிகலா மற்றும் தினகரனிடம் வீடியோவை வெளியிட்டதற்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன் என்று தில்லாக சொன்னார் வெற்றிவேல். பொங்கலை முன்னிட்டு சசிகலாவை சிறையில் சந்தித்த போது வீடியோ விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டதாக கூறிய வெற்றிவேல், சிரித்த முகத்துடனே தினகரன் பேட்டியளிக்கும் போது அருகில் நின்று கொண்டிருந்தார்.

EX MLA Rajasekaran and supporter of TTV Dinakaran says that Dinakaran only given Jayalalitha video to release it and Rs.20 token given to voters is also true.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS