மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் - ரஜினி

Oneindia Tamil 2018-01-17

Views 1.5K

அரசியல் கட்சி தொடங்குதற்கு முன்னர் ரசிகர்மன்றத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக விரைவில் 32 மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றத்தில் 3 அல்லது 4 நிர்வாகிகளை நியமிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும், மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் களத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியானது தொடரும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி ராமநாதபுரத்தில் அரசியல் கட்சியை அறிவித்துவிட்டு மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மக்களை சந்திக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது புரட்சி சுற்றுப் பயணம் இல்லை, மக்கள் பிரச்னைகள் பற்றி தான் புரிந்து கொள்வதற்கான பயணம் என்றும் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துள்ள ரஜினியும் கட்சிக்கான பணியில் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சி அறிவிக்கும் முன்னர் தனது மக்கள் மன்றத்தில் ஒரு கோடி பேரை இணைத்துவிட வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுகிறார் ரஜினி.

இதற்காக தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் விரைவில் ஒரு சிறிய குழுவை அனுப்பி உறுப்பினர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை முதலில் நியமித்து பின்னர் அவர்கள் மூலமாக உறுப்பினர் சேர்க்கையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Rajini has decided to appoint 3 or 4 executives at Rajini People's Forum in 32 districts as soon as the political party begins.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS