ஒன்றாகத் தான் துவங்கினோம் சொல்லாமல் போய்விட்டாயே என்று நடிகர் சித்துவின் மறைவு குறித்து நடிகர் சன்னி வெயின் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகனும், நடிகருமான சித்து(27) கோவா கடற்கரையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூரை சேர்ந்த சித்து கோவா சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்தது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சித்துவுடன் சேர்ந்து செகண்ட் ஷோ படம் மூலம் சினிமா வாழ்க்கையை துவங்கியவர் சன்னி வெயின். ஒன்றாகத் தானே துவங்கினோம், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போய்விட்டாயே என்று சன்னி வருத்தப்பட்டுள்ளார்.
Second Show actor Sunny Wayne condoled the death of his buddy Sidhu Pillai. 'We all started from a single frame !!! You left this world without saying a word!!! Team #secondshow won't be the same any more !Heartfelt condolences my sidhu !!', Sunny posted this on facebook.