நடிகர் கமல்ஹாசனும் தீவிர அரசியலுக்கு வருகிறார். அதை தனது சொந்த மண்ணான ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அவர் தொடங்குவவது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தனது சொந்த ஊரை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் கட்சிப் பெயர் என்ன, அவர் என்ன மாதிரியான கொள்கைகளை மக்களிடம் வைக்கப் போகிறார், என்ன சொல்லி மக்கள் ஆதரவைத் திரட்டப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
மக்களுக்குத் தேவையான அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டியவர் கமல். எண்ணூர் கழிமுகப் பிரச்சினையில் அவர் களம் இறங்கியது பல அரசியல்வாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது. அந்தப் பிரச்சினையே அதன் பிறகுதான் அனைவராலும் பார்க்கப்பட்டது.
அதிரடி அரசியலில் குதித்தாலும் கூட தனது கட்சிப் பெயர், கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவிக்காமல் இருந்தார் கமல். இதுகுறித்துக் கேட்டபோது நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன். விரைவில் மற்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டும் என்று கூறி வந்தார் கமல்.
Kamal Hasan has chosen his native district Ramanathapuram for the beginnig of his political Journey. He has slated his first meeting with the people on Feb 22 from Ramanathapuram, which is the district to home his native town Paramakudi