தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் கமலின் அதிரடி திட்டம்

Oneindia Tamil 2018-01-16

Views 4.2K

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், நாளை மறுநாள் அவர் தனது சுற்றுப் பயண விவரத்தை அறிவிக்க உள்ளார். தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை மனதில் வைத்து நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார்கள். தமிழகம் மோசமான நிலையில் இருப்பதால் அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினிகாந்த் சமீபத்தில் அறிவித்தார். அவருக்கு முன்பாகவே, தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் கமல். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு, திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் போன்ற தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற பெயரில் வெப்சைட்டில் கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணி நடக்கிறது. செல்போன் ஆப் மூலமாகவும் இதில் ஆள் சேர்ப்பு நடைபெறு கிறது. இதேபோல கமல்ஹாசன், விசில் மையம் என்ற பெயரில் ஊழலுக்கு எதிராக 'விசில் ஊத' மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென கமல் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அதாவது ஜனவரி 26ம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவர் அறிவித்தார். அதுகுறித்த விவரங்களை ஜனவரி 18ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்தார். எனவே நாளை மறுநாள் அவர் என்ன மாதிரி பயண திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்று அறிவதற்காக மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

In the circumstances where actor Kamal Hassan's political enthusiasm has created great expectations, he will announce his next tour tomorrow. Actors Rajinikanth and Kamal Haasan are making political advances in the politics of Tamil Nadu. Rajinikanth recently announced that Tamil Nadu is coming to politics due to the worst situation. In front of him, Kamal declared his political admission. Rajinikanth met with leaders like DMK leader Karunanidhi and RM Veerappan after his political admission announcement.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS