தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைப்பதாக கூறும் ரஜினி காவிரி விவகாரத்தில் என்ன செய்ய போகிறார் ?

Oneindia Tamil 2018-01-16

Views 6.1K

தமிழக மக்களுக்கு நல்லதே செய்யவே அரசியலுக்கு வருவதாகவும், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பார்த்து சிரிப்பதாகவும் ஆதங்கப்பட்ட ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள ரஜினியின் நண்பர் அம்பரீஷ் தமிழகத்திற்கு காவிரி நீர் தரவே கூடாது என்று கூறியுள்ள விவகாரத்தில் ரஜினியின் பதில் என்ன என்ற கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை, தமிழக நிலைமையை பார்த்து மற்ற மாநிலத்தவர் சிரிப்பதாக சொன்னார் ரஜினிகாந்த். தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 3 ஆண்டுகள் வரை தனது ரசிகர் மன்றத்தை சார்ந்த யாரும் அரசியல் பற்றி எதுவும் பேசக் கூடாது என்றும் வாய்ப்பூட்டு போட்டார் ரஜினி.

எனினும் அரசியல் வருகை குறித்து அறிவித்த கையோடு உறுப்பினர் சேர்க்கைக்கான படலத்தை அறிவித்தார் ரஜினி. எதிர்பார்த்த அளவிற்கு அதில் உறுப்பினர்கள் பதிவு செய்தனரா என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவே இல்லை.

Rajinikanth's close friend Ambareesh urges Karnataka CM not to share Cauvery water with Tamilnadu, what is the stand of Rajini in Cauvery issue, will he react to his friend's letter regarding Cauvery water sharing.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS