நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? கண்டுபிடிப்பது எப்படி.?
கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிய காலமெல்லாம் மலையேறி, எல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் என்றாகிவிட்டது. கடைகளில் கிடைக்காத விலை நிர்ணயம் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளை இ-காமர்ஸ் வலைத்தளங்கள் வழங்குவதே நாம் அனைவரும் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய வலைத்தளங்களுக்குள் அலைமோத காரணம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களும் வாங்க கிடைக்கும் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சரி இன்று அறிந்து கொள்ளுங்கள், அப்படியே நீங்கள் ஆன்லைனில் வாங்குவது அல்லது வாங்கப்போவது ஒரு திருடப்பட்ட ஸ்மார்ட்போனா.? அதை எப்படி கண்டறிவது என்பதையும் அறிந்துகொள்வோம்.!