அஜித்தின் 58-வது படமான 'விசுவாசம்' சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிறது. அஜித்தும் சிவாவும் இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகிறார்கள். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யார் எனத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், படத்தின் டீசருடன், இசையமைப்பாளர் யார் எனும் விபரமும் நாளை வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது.
அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கிறார். படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Viswasam ட்ரெண்ட் ஆனது. பட டைட்டிலை தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.