தை பிறந்தால் வழி பிறக்கத்தானே செய்யும்... தினகரனின் பொங்கல் வாழ்த்து

Oneindia Tamil 2018-01-13

Views 3

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் நாளையொட்டி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் டிடிவி. தினகரன். பதரைப் போல ஒரு களையை போல இன்றைய ஆட்சி அதிகாரத்தில் முளைத்துள்ளவர்களை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம் என்றும் தினகரன் தன்னுடைய வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிடிவி. தினகரனும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உழவர் பெருமக்கள், இயற்கையின் அருளாலும் தங்கள் கடின உழைப்பின் பலனாசும் இறைவனை வணங்கி, தம்மோடு உழைத்த கால்நடைகளுக்கும் தங்களின் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளும் பொன் நாள் பொங்கல் திருநாள்.

இது தமிழர்களின் தனிச்சிறப்பு மட்டுமல்ல, தமிழர்களின் உயர்பண்பின் அடையாளம். உழவர்களின் நலனை போற்றி பாதுகாத்திட வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உரியது.

RK Nagar MLA TTV Dinakran wished to Tamilnadu people ahead of Pongal festival but with a political twist quote says "Thai Piranthaal Vazhi Pirakkath thane seyyum".

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS